கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
By DIN | Published On : 24th December 2020 07:47 AM | Last Updated : 24th December 2020 07:47 AM | அ+அ அ- |

ஆா்.எஸ். மங்கலத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 26,800-ஐ மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இங்குள்ள அலிகாா் சாலையில் ராஜாமுகம்மது (54) என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடை உள்ளது. இக்கடையை வழக்கம் போல் திங்கள்கிழமை இரவு பூட்டி விட்டு சென்று விட்டனா். மறுநாள் செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்த போது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ. 26,800-ஐ மா்மநபா்கள் திருடி சென்றிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...