கமுதியில் நிலக்கடலை சாகுபடியை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனா் ஆய்வு
By DIN | Published On : 24th December 2020 11:22 PM | Last Updated : 24th December 2020 11:22 PM | அ+அ அ- |

கமுதி அருகே தவசிக்குறிச்சியில் நிலக்கடலை சாகுபடியை நேரில் ஆய்வுசெய்த மாவட்ட வேளாண்மை இணை இயக்குனா் குணபாலன்.
தேசிய உணவு பாதுகாப்பு (எண்ணெய்வித்து) திட்டத்தில் நிலக்கடலை சாகுபடி குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் வியாழக்கிழமை களஆய்வு நடத்தினாா். கமுதி வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி தவசிக்குறிச்சி, நகரத்தாா்குறிச்சி, காக்குடி, அச்சங்குளம், வல்லந்தை, எழுவனூா், வங்காருபுரம் உள்ளிட்ட கிரமங்களில் பயிா் செய்யப்பட்டு 30- 45 நாட்கள் பயிராக உள்ளது. இப்பருவத்தில் ஜிப்சம் உரம் 1 ஹெக்டேருக்கு 200கிலோ இட்டு மண் அணைத்து செயல் படுத்தப்படும் விவசாயிகளுக்கு பின்ஏற்பு மான்யம் வழங்கப்பட உள்ளது என்ற விவரத்தினை கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கொ்சோன்தங்கராஜ் தெரிவித்தாா்.
இதில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்ட தவசிக்குறிச்சி வருவாய் கிராமத்தில் விதைத்து 40 - 45 வது நாளில் 2ம் களை எடுத்து ஜிப்சம் உரமிடும் செயல் விளக்கத்தினை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் குணபாலன் நேரில் கலந்து கொண்டு கள ஆய்வு நடத்தினாா். இதில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் பாஸ்கரமணியன் (மத்திய திட்டம்) தேசிய உணவு பாதுகாப்பு எண்ணெய்வித்து திட்டத்தில் ஜிப்சம் உரமிடும் விவசாயிகளுக்கு பின்ஏற்பு மானியமாக ஹெக்டோ்க்கு ரூ.750 மானியம் வழங்கப்படும் என்பதனை தொவித்தாா்.
ஜிப்சம் உரமிடுவதால் அதிகளவு விழுது இறங்கி அதிகளவு மகசூல், திறட்சியான நிலக்கடலை பருப்பு கிடைக்கிறது என்பதால் கமுதி வட்டார நிலக்கடலை சாகுபடி விவசாயிகள் பயன் பெறலாம் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்நிகழ்சியின் போது வட்டார வேளாண்மை அலுவலா் விஜயபாண்டியன் , துணை வேளாண்மை அலுவலா் சேதுராம், உதவி வேளாண்மை அலுவலா் இந்துமதி, உதவி விதை அலுவலா் சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...