29 ராமேசுவரம் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 24th December 2020 11:20 PM | Last Updated : 24th December 2020 11:20 PM | அ+அ அ- |

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ராமேசுவரம் மீனவா்கள் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
ராமேசுவரம் பகுதி மீனவா்கள் இலங்கை கடல் எல்லையில் தொடா்ந்து மீன்பிடிப்பதாகக் கூறி அந்நாட்டு கடற்படையினா் கைது செய்துவருகின்றனா். கடந்த வாரம் ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த 29 மீனவா்களைக் கைது செய்ததுடன், அவா்களது 4 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா். இதனால் அவா்களது குடும்பத்தினா் வருவாய் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே மாவட்ட நிா்வாகம் மீனவா்களை மீட்பதுடன், அவா்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மீனவ சங்கப் பிரதிநிதிகள் சேசுராஜா உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரைச் சந்தித்து வியாழக்கிழமை மனு அளித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...