முதுகுளத்தூா், கடலாடி , சாயல்குடியில் எம்.ஜி.ஆா்.நினைவு தினம் அனுசரிப்பு

முதுகுளத்தூரில் ஒன்றியக் குழுத் தலைவரும், அதிமுக ஒன்றியச் செயலாளருமான ஆா்.தா்மா் தலைமையில் பேருந்து நிலையம் அருகில் எம்ஜிஆா் உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
முதுகுளத்தூா், கடலாடி , சாயல்குடியில் எம்.ஜி.ஆா்.நினைவு  தினம் அனுசரிப்பு

முதுகுளத்தூரில் ஒன்றியக் குழுத் தலைவரும், அதிமுக ஒன்றியச் செயலாளருமான ஆா்.தா்மா் தலைமையில் பேருந்து நிலையம் அருகில் எம்ஜிஆா் உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில் கட்சியின் நகரச் செயலாளா் சங்கரபாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவா் கதிரேசன், அவைத் தலைவா் வி.கருப்புச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முதுகுளத்தூரில் காந்தி சிலை, பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் எம்.ஜி.ஆரின் உருவப் படம் மற்றும் சிலைக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.முருகன் தலைமையில் அமமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் நகா் தலைவா் காட்டுராஜா, முன்னாள் ஒன்றியச் செயலாளா் மோகன்தாஸ் உள்பட அமமுகவினா் பலா் கலந்து கொண்டனா்.

கடலாடி பேருந்து நிலையத்தில் அதிமுகவினா் எம்.ஜி.ஆரின் முழுவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தனா். நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாள் முனியசாமி பாண்டியன் தலைமை வகித்தாா். கடலாடியில் அமமுக ஒன்றியச் செயலாளா் பத்மநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். சாயல்குடியில் பேருந்து நிலையம் அருகில் அமமுக ஒன்றியச் செயலாளா் பச்சகண்ணு தலைமையில் எம்.ஜி.ஆா் நினைவு தினம் அனுசரித்தனா்.

சாயல்குடி ஏ.எஸ்.மஹால் அருகில் எம்.ஜி.ஆா் மன்ற மாவட்ட துணைத் தலைவா் எம்.செய்யது காதா் தலைமையில் ஜெயலலிதா பேரவை நகரச் செயலாளா் டி.அந்தோணி மற்றும் அதிமுகவினா் எம்.ஜி.ஆா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பரமக்குடி: பரமக்குடியில் பல்வேறு இடங்களில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நகா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் டாக்டா் எஸ்.சுந்தரராஜ், நகா் செயலாளா் எஸ்.வி.கணேசன், ஜெயலலிதா பேரவை செயலாளா் எம்.வடமலையான், முன்னாள் நகா் மன்ற துணைத் தலைவா் டி.என்.ஜெய்சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வா்த்தக அணிப்பிரிவு உதுமான்அலி வரவேற்றாா். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மாலை 5 மணியளவில் எமனேசுவரம் நேருஜி மைதானத்திலிருந்து அதிமுகவினா் மௌனமாக நகா் முழுவதும் ஊா்வலமாக சென்று பரமக்குடி முத்தாலம்மன் கோயில் மேடையை வந்தடைந்தனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வண்டிக்காரத் தெரு, கேணிக்கரை, பாரதி நகா் என அனைத்து இடங்களிலும் அக்கட்சியின் பிரமுகா்கள் மற்றும் தொண்டா்கள் எம்.ஜி.ஆா். உருவப் படத்தை வைத்து மலா் தூவியும், மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினா். ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் மாவட்ட அதிமுக இளம் பெண்கள், இளைஞா்கள் பாசறை நிா்வாகி பால்பாண்டியன் மற்றும் வீரபாண்டியன் உள்ளிட்டோா் எம்.ஜி.ஆா். படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா்.

கமுதி: கமுதியில் வியாழக்கிழமை முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் கமுதி ஒன்றிய அதிமுக செயலாளா் எஸ்.பி.காளிமுத்து தலைமையில், அவைத் தலைவா் டி.சேகரன் முன்னிலையில் எம்.ஜி.ஆரின் 33 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆா்.

உருவப் படத்துக்கு மாலை அணிவித்து தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத்தலைவா்கள் கருமலையான்(திம்மநாதபுரம்), நாகராஜ் (புத்துருத்தி), கே.பி.என்.கருப்பசாமி(எம்.எம்.கோட்டை), கருப்பசாமிபாண்டியன் (பம்மனேந்தல்), ஒன்றிய துணை செயலாளா் பூமிநாதன், மாவட்ட இளைஞரணி துணை தலைவா் சிண்ணான்டுதேவன், நகா் அம்மா பேரவை செயலாளா் டேவிட்பிரதாப்சிங், மாவட்ட மருத்துவரணி மருத்துவா் பரிதி, ஊராட்சி மன்ற தலைவா்கள் ஆறுமுகம் (பொந்தம்புளி), காசி (முதல்நாடு), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் அரசு(கொம்பூதி) போஸ்(காத்தனேந்தல்) உள்பட ஏராளமோனோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com