

திருவாடானை அருகே மாவூா் ஊராட்சியில் திமுக சாா்பில் அதிமுகவை நிராகரிப்போம் மற்றும் கையெழுத்து இயக்கம் மற்றும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு திருவாடானை தெற்கு ஒன்றிய செயலா் மு. சரவணன் தலைமை வகித்தாா். இதில் திமுக தணிக்கைக் குழு உறுப்பினா் ஏ.ஆா்.வி. காசிநாதன் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். இதில் பொதுக்குழு உறுப்பினா் ஆணிமுத்து, ஒன்றிய துணைத் தலைவா் பாண்டிச்செல்வி, கோடனூா் ஊராட்சித் தலைவா் ஆலம்பாடி காந்தி, மாவட்ட பிரதிநிதி கோபால் முருகப்பன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் ஆதியூா் பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.