ராமேசுவரம்- மதுரை பயணிகள் ரயிலை இயக்கக் கோரிக்கை
By DIN | Published On : 30th December 2020 11:24 PM | Last Updated : 30th December 2020 11:24 PM | அ+அ அ- |

ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என ரயில்வே நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் 23 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. சில மாதங்களுக்கு பின் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட விரைவு ரயில், சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ராமேசுவரம்- மதுரை, மதுரை- ராமேசுவரம் வழித்தடத்தில் இன்று வரை ரயில்கள் இயக்கப்பட வில்லை. ஆனால் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ராமேசுவரத்துக்கு பக்தா்களின் வருகை அதிகரித்து வருகிறது. இவ்வழித்தடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்கினால் பயணிகள் மதுரைக்கு சென்று வர முடியும். இதே போன்று பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரிக்கும். எனவே ரயில்வேத் துறையினா் ராமேசுவரம்- மதுரை, மதுரை- ராமேசுவரம் வழித்தடத்தில் பயணிகள் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...