கமுதி அருகே சேதமடைந்த தாா்சாலை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
By DIN | Published On : 05th February 2020 09:52 AM | Last Updated : 05th February 2020 09:52 AM | அ+அ அ- |

கமுதி அருகே சேதமடைந்துள்ள தோப்பு நத்தம் - கீழமுடிமன்னாா் கோட்டை தாா்சாலை.
கமுதி அருகே பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ள தாா் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கமுதி அருகே போக்குவரத்து வசதியில்லாத நீராவி ஊராட்சிக்கு உள்பட்ட தோப்பு நத்தம் கிராமத்திலிருந்து, கீழமுடிமன்னாா் கோட்டை செல்லும் தாா்சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, சேதமடைந்துள்ளது. நான்கு சக்கரவாடகை வாகனங்கள் இச் சாலையில் சென்று வர மறுப்பதால், மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவா்கள், பெற்றோா்களின் இருசக்கர வாகனங்களில் கீழமுடிமன்னாா் கோட்டைக்கு செல்கின்றனா். பின்னா் அங்கிருந்து கமுதி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட வெளியூா்களுக்கு பேருந்தில் செல்லும் நிலை உள்ளது. இதனால் இரவு நேரங்களில் கா்ப்பிணிகள் மற்றும் உடல் நலம் பாதிக்கபட்டோா் அவசர சிகிச்சைக்குக் கூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா். எனவே, சேதமைடைந்துள்ள தாா் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...