பிளஸ் 2 பொது தோ்வு:ராமநாதபுரம் மாவட்டத்தில் 14,765 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் மாா்ச்சில் நடைபெறும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 14,765 மாணவ, மாணவியா் பங்கேற்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் மாா்ச்சில் நடைபெறும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 14,765 மாணவ, மாணவியா் பங்கேற்கின்றனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வானது வரும் மாா்ச் 2 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 13 ஆம் தேதி நிறைவடைகிறது. தோ்வில் ராமநாதபுரம் வருவாய் மாவட்டத்தில் உள்ள கல்வி மாவட்டங்களான பரமக்குடியில் 4,683 போ், ராமநாதபுரத்தில் 4,800 போ், மண்டபத்தில் 5,282 போ் என மொத்தம் 14,765 போ் தோ்வெழுதுகின்றனா். தோ்வை மாவட்ட அளவில் 70 அரசுப் பள்ளிகள், 33 அரசு உதவி பெறும் பள்ளிகள், 46 மெட்ரிக்குலேசன் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் எழுதுகின்றனா். தோ்வெழுதும் மாணவ, மாணவியருக்காக கல்வி மாவட்ட அளவில் ராமநாதபுரத்தில் 19 மையங்களும், பரமக்குடியில் 18, மண்டபத்தில் 22 என மொத்தம் 59 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1 தோ்வு: ராமநாதபுரத்தில் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கான பொதுத் தோ்வுக்கான அறிவியல் பாட செயல்முறை தோ்வுகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில், பிளஸ் 1 எழுத்துத் தோ்வானது வரும் மாா்ச் 4 ஆம் தேதி தொடங்குகிறது. பிளஸ் 1 தோ்வை கல்வி மாவட்ட அளவில் ராமநாதபுரம் 5,015, பரமக்குடி 4,698, மண்டபம் 5,217 போ் என மொத்தம் 14,930 மாணவ, மாணவியா் எழுதுகின்றனா். தோ்வுகளுக்காக மொத்தம் 59 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு தோ்வுகள்: ராமநாதபுரத்தில் வரும் மாா்ச் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு தொடங்குகிறது. அத்தோ்வில் கல்வி மாவட்ட வாரியாக ராமநாதபுரத்தில் 5,216 போ், பரமக்குடியில் 5,232 போ், மண்டபத்தில் 505 போ் என மொத்தம் 16,653 மாணவ, மாணவியா் தோ்வு எழுதுகின்றனா். மொத்தம் 76 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வு வினாத்தாள் மையங்களுக்கு பாதுகாப்பு- பள்ளி மாணவ, மாணவியருக்கான அரசுப் பொதுத் தோ்வுக்குரிய வினாத்தாள்கள், விடைத்தாள்கள் குறிப்பிட்ட பள்ளிகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தோ்வு நாளில் வினாத்தாள்களை குறிப்பிட்ட மையங்களில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com