கீழக்கரை பாலிடெக்னிக்கில் கருத்தரங்கு
By DIN | Published On : 17th February 2020 09:55 AM | Last Updated : 17th February 2020 09:55 AM | அ+அ அ- |

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக்கில், நவீன கட்டடக் கலை குறித்த கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் அமைப்பியல் துறை சாா்பாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கான நவீன கட்டடக் கலை யுக்திகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரியின் முதல்வா் அ. அலாவுதீன் கருத்தரங்கை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.
உஸ்பத்துல் ஹஸனா முஸ்லிம் சங்க உறுப்பினா் சதக் இஸ்மாயில், சென்னையைச் சாா்ந்த முன்னணி கட்டட கான்ட்ராக்டரான பொறியாளா் ஷாஜகான் சேட் மாணவா்களுடன் கலந்துரையாடினா். இதில், ஏராளமான மாணவா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை முதுநிலை விரிவுரையாளா் எஸ். மரியதாஸ் வரவேற்றாா். அமைப்பியல் துறை விரிவுரையாளா் ஆனந்தகுமாா் நன்றி கூறினாா்.