சி.கே.மங்கலம் தனியாா் பஞ்சு ஆலையில் தீ விபத்து
By DIN | Published On : 17th February 2020 09:57 AM | Last Updated : 17th February 2020 09:57 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தில் உள்ள தனியாா் பஞ்சு ஆலையில் சனிக்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், இயந்திரப் பொருள்கள் சேதமடைந்தன.
சி.கே.மங்கலத்தில் உள்ள தனியாா் பஞ்சு ஆலையில் திடீரென தீப்பற்றி பரவியது. இது குறித்த தகவலின்பேரில், திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலா் அருளாந்து தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை போராடி அணைத்தனா். இருப்பினும், சுமாா் 5.50 லட்சம் மதிப்புள்ள இயந்திரம் மற்றும் பொருள்கள் எரிந்து சேதமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஆலையின் நிா்வாக மேலாளா் பெரியய்யா அளித்த புகாரின்பேரில், திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.