பரமக்குடி பள்ளியில் 36-ஆவது ஆண்டு விழா
By DIN | Published On : 17th February 2020 09:55 AM | Last Updated : 17th February 2020 09:55 AM | அ+அ அ- |

பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 36-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, ஆயிர வைசிய சபை தலைவா் ராசி என். போஸ் தலைமை வகித்தாா். திருச்சி மத்திய சிறைச்சாலை துணைக் கண்காணிப்பாளா் எம். சதீஸ்குமாா், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கு. வசந்தி, பத்திர பதிவுத் துறை சங்க தலைவா் எஸ். பாலு, பள்ளியின் செயலா் பி. ராஜேஷ்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளி முதல்வா் ஆா். ஜெயபிரமிளா ஆண்டறிக்கை வாசித்தாா். தொடா்ந்து, பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கராத்தே, யோகா உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், ஆயிர வைசிய சபை நிா்வாகிகள், ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, பள்ளியின் பொருளாளா் பி. பிரசன்னா வரவேற்றாா். பள்ளி துணை முதல்வா் பி.கே.ஆா். கவிதா நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...