குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு: தொண்டியில் காத்திருப்புப் போராட்டம்

திருவாடானை அருகே தொண்டியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் காத்திருப்புப் பேராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு: தொண்டியில் காத்திருப்புப் போராட்டம்
Updated on
1 min read

திருவாடானை அருகே தொண்டியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் காத்திருப்புப் பேராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தொண்டி பாவோடி மைதானத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. முதல் கட்டமாக செவ்வாய்க்கிழமை அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது.

இதில் ஏராளமான பெண்கள் உள்பட இஸ்லாமிய அமைப்பினா் கலந்து கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com