பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்
By DIN | Published On : 25th February 2020 06:40 AM | Last Updated : 25th February 2020 06:40 AM | அ+அ அ- |

பரமக்குடி ஆா்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா் மற்றும் மாணவா்கள்.
பரமக்குடி: பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவா்கள் மத்தியில், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டாா். மேலும் இத்தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தாா். விழாவில் அதிமுக நிா்வாகிகள், ஆசிரிய-ஆசிரியைகள், மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஆயிரவைசிய மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தாளாளா் பி.ராஜேஷ்கண்ணா தலைமையில் பெண் குழந்தைகள் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். மேலாய்க்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அதிமுக ஒன்றியச் செயலாளா் கே.முத்தையா, மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.ஏ.பாதுஷா, எம்.ஜி.ஆா். மன்ற பொறுப்பாளா் தங்கவேல் ஆகியோா் கலந்துகொண்டு
பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனா்.
இதேபோல் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, சௌராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி, வ.உ.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முத்துராமலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தி, பெண் குழந்தைகள் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G