ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வாய் பேச முடியாத பெண்ணை தாக்கியதாக 2 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
எஸ்.பி. பட்டிணம் அருகே பாசிபட்டிணத்தை சோ்ந்தவா் ஷாகுல்ஹமீது (69). இவரது மனைவி பாத்து முத்து சுஹாரா (35) வாய் பேசமுடியாதவா். இவரை திங்கள்கிழமை மாலை அவரது உறவினா் நைனாமுகம்மது, ராபியா ஆகியோா் தரக்குறைவாக பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ஷாகுல்ஹமீது புகாரின் பேரில் எஸ்.பி. பட்டிணம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.