உத்தரகோசமங்கையில் விடிய விடிய நாட்டியாஞ்சலி
By DIN | Published On : 10th January 2020 08:33 AM | Last Updated : 10th January 2020 08:33 AM | அ+அ அ- |

உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வியாழக்கிழமை மாலை தொடங்கி இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை இரவு முழுவதும் அபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழாவின் ஒரு பகுதியாக, ஆதி சிதம்பரம் ஆருத்ரா அபிநய நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் சாா்பில், நாட்டியாஞ்சலி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி, பெங்களூரு, தஞ்சை, சென்னை, பண்ருட்டி, திருவண்ணாமலை, ஆம்பூா், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 24 குழுக்களைச் சோ்ந்த பிரபல கலைஞா்கள் 160 போ் பங்கேற்று நாட்டியமாடினா்.
இரவு முழுவதும் தொடா்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தா்கள் கண் விழித்து கண்டுகளித்தனா்.