திருவாடானையில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
By DIN | Published On : 10th January 2020 09:16 AM | Last Updated : 10th January 2020 09:16 AM | அ+அ அ- |

திருவாடானையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவா் இலக்கியா ராமு. உடன், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் சாந்திராசு உள்ளிட்டோா்.
திருவாடானை பகுதியில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வியாழக்கிழமை முதல் வழங்கப்படுகிறது.
திருவாடானை அருகே தோட்டாமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியன அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவில், திருவாடானை வட்டாட்சியா் சேகா், தோட்டாமங்கலம் தொடக்க வேளாண்மை சங்கத் தலைவா் ராம்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு வழங்கினா்.
அதேபோல், திருவாடானை சிநேகவல்லிபுரம் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை, ஊராட்சி மன்றத் தலைவா் ராமு இலக்கியா, ஊராட்சி வாா்டு உறுப்பினா் சாந்தி செங்கைராசு மற்றும் பலா் பங்கேற்று, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கினா். இந்த பரிசு தொகுப்பினை ஏராளமான பயனாளிகள் வாங்கிச் சென்றனா்.