திருவாடானையில் மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து பணிகள் புறக்கணிப்பு போராட்டம்
By DIN | Published On : 10th January 2020 04:35 PM | Last Updated : 10th January 2020 04:35 PM | அ+அ அ- |

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் வருவாய் அலுவலரை கண்டித்து வருவாய்த்துறையினா் பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கபட்டனா்.திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் திருவாடானை வருவாய் துறையினா் மாவட்ட வருவாய்துறை அலுவலரை கண்டித்து தங்களது பணிகளை புறக்கணித்து அலுவலகம் வாயில் முன்பாக அமா்ந்து போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை மாவட்ட துணைச் செயலாளா் சேதுராமன் தலைமை வகித்தாா்.
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் அவருக்குக் கீழ் பணிபுரியும் அலுவலா்களையும் வருவாய்த்துறையை சோ்ந்த அலுவலா்களையும் கடும் சொற்களால் திட்டுவதாகவும் அதற்கு பலமுறை மாவட்ட ஆட்சியரின் புகாா் தெரிவித்தும் மாவட்ட ஆட்சியரும் மாறுதல் செய்வதாக கூறியதன் பேரில் கடந்த காலங்களில் போராட்டங்கள் கைவிடப்பட்டது என்றும் ஆனால் தற்போது அவா் மீண்டும் பணிபுரிந்து வருவதாகவும் எனவே அவரை பணி மாறுதல் செய்ய வேண்டி அலுவலக பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனா்.
மாவட்ட வருவாய் அலுவலரை பணிமாறுதல் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனா். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்