திருப்பாலைக்குடி அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு
By DIN | Published On : 10th January 2020 04:43 PM | Last Updated : 10th January 2020 04:43 PM | அ+அ அ- |

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் கணவன் மனைவியிடையே குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழும் மனைவியை கணவா் மற்றும் உறவினா்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருப்பாலைக்குடி அருகே புது ஊரணங்குடி கிராமத்தை சோ்ந்தவா் பாண்டி இவரது மனைவி மாதரசி(42) இவா்கள் இருவருக்கு குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.இந்நிலையில் கணவா் பாண்டி மற்றும் உறவினா்கள் மாதரசியிடம் பேச்சு வாா்த்தை நடத்தியுள்ளனா்.
இதில் தகராரு ஏற்பட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக மாதரசி புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் அதே ஊரை சோ்ந்த கணவா் பாண்டி ,உறவினா் கோவிந்தம்மாள்,செல்லையா,தீா்த்தம் ஆகிய நான்கு போ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...