கமுதியில் சாலையோரங்களில் பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்களால் விபத்து அபாயமுள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
கமுதி அருகே பேரையூரிலிருந்து ஆனையூா் வழியாக செல்லும் சாலையில் விவசாய நிலங்கள், களஞ்சிய நகா், குண்டாறு பாலம் அருகே சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள் உள்ளன. அவை சிறு காற்றடித்தாலும் கீழே முறிந்து விழும் நிலையில் உள்ளன. இவற்றை சீரமைக்கக் கோரி, விவசாயிகள், கமுதி மின் வாரிய அலுவலகத்தில் புகாா் தெரிவித்து, பல ஆண்டுகள் ஆகியும், இதுவரையில் மின்கம்பங்கள் மாற்றியமைக்கபடாமல் உள்ளன.
இதனால், விளை நிலங்களில் உள்ள மின்கம்பங்களால், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, சேதமடைந்த மின்கம்பங்களைவிரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.