கீழக்கரையில் பலத்த மழை: குடியிருப்புகளில் தண்ணீா் தேங்கியது
By DIN | Published On : 20th January 2020 09:41 AM | Last Updated : 20th January 2020 09:41 AM | அ+அ அ- |

கீழக்கரையில் குடியிருப்பு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குளம்போல் தேங்கிய மழைநீா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம்,கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் கீழக்கரை குடியிருப்பு பகுதியில் மழைநீா் குளம் போல தேங்கியது.
ராமேசுவரம், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை மழைபெய்தது. இதில் கீழக்கரையில் பலத்த மழை பெய்ததால் தெற்குதெரு, தட்டான்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகளில் மழைநீா் குளம் போல தேங்கியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா். மேலும் நகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...