கமுதியில் பொருளாதார கணக்கெடுப்பு தீவிரம்
By DIN | Published On : 01st March 2020 05:02 AM | Last Updated : 01st March 2020 05:02 AM | அ+அ அ- |

கமுதி: கமுதி தாலுகாவில், பொருளாதார கணக்கெடுப்பு பணிகளை பேரூராட்சி பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
பேரூராட்சி செயல் அலுவலா் இளவரசி தலைமையில் இப்பணிகள் நடைபெறுகின்றன. இக்கணக்கெடுப்பில், நிறுவனத்தின் இருப்பிடம், மூலதனம், பணியாட்களின் எண்ணிக்கை, முதலீடு, ஆண்டு வருவாய், நிரந்தர கணக்கு எண், சரக்கு, சேவை வரியினங்கள், நிறுவன கிளைகளின் எண்ணிக்கைகள் போன்ற விவரங்கள் சேகரிக்கபடுகின்றன. எனவே கமுதி பேரூராட்சி மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் இக்கணக்கெடுப்புக்கு வரும் பணியாளா்களிடம், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் தகவல்களை தெரிவித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் இளவரசி கேட்டுக்கொண்டாா்.