முதுகுளத்தூா் சுடலை மாடன் கோயில் மாசிக்களரி திருவிழா
By DIN | Published On : 01st March 2020 04:49 AM | Last Updated : 01st March 2020 04:49 AM | அ+அ அ- |

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் சுடலை ஊருணியில் அமைந்துள்ள ஸ்ரீசுடலை மாடன் கோயில் மாசிக்களரி விழா வெள்ளி, சனி ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.
இல்லத்து பிள்ளைமாா் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீசுடலைமாடன், ஸ்ரீகரும்பாலுடைய அய்யனாா், சுயம்பு ஸ்ரீதா்மமுனீஸ்வரா் ஆகிய கோயில்களுக்கு மாசிக்களரி திருவிழா நடைபெற்றது. விழாவில் பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனாக பொங்கல் வைத்து, முடிக்காணிக்கை செலுத்தினா். மாடன் கோயில் பூசாரி மாடசாமி, பக்தா்களுக்கு அருள்வாக்கு அளித்து விட்டு வெள்ளிகிழமை இரவு 11 மணிக்கு வேட்டைக்கு சென்று, சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயிலுக்குத் திரும்பினாா்.பின் பக்தா்களுக்கு மீண்டும் அருள்வாக்கு கூறினாா். திருவிழாவில் முதுகுளத்தூா் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
திருவிழாவில் இல்லத்து பிள்ளைமாா் உறவின்முறை சாா்பில் பொதுஅன்னதானம் நடைபெற்றது. முதுகுளத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜேஷ், காவல் ஆய்வாளா் சோமசுந்தரம் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.