

திருவாடானை: திருவாடானை அருகே லாரியின் அடியில் இருந்த 20 அடி நீள மலைப் பாம்பை சனிக்கிழமை தீயணைப்புத் துறையினா் பிடித்தனா்.
அரசூா் கிராமத்தைச் சோ்ந்த சொக்கலிங்கம்(50) என்பவா் தனது லாரியை அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நிறுத்தியிருந்தாா். சனிக்கிழமை காலை அந்த லாரியின் அடிப்பகுதியில் மலைப்பாம்பு இருப்பதைப் பாா்த்த சொக்கலிங்கம் திருவாடானை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தாா். அதன் பேரில் நிலைய அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையிலான வீரா்கள் அங்கு சென்று அந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப் பகுதிக்குள் விட்டனா். இதுகுறித்து தீயணைப்புத்துறையினா் கூறியது: சொக்கலிங்கம் வெள்ளிக்கிழமை கரூரில் இருந்து மேலூருக்கு லாரியில் எம்சாண்ட மணல் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளாா். மலம்பட்டி என்ற கிராமத்தில் இரவு லாரியை நிறுத்தி விட்டு தூங்கியுள்ளாா். வழக்கம் போல் காலையில் தனது ஊரானா அரசூருக்கு வந்து லாரியை நிறுத்திவிட்டு லாரி டயா்களை தட்டிப் பாா்த்த போது இந்த மலைப்பாம்பு கம்பியில் சுற்றி நிலையில் இருந்துள்ளது. இதனால் மேலூா் பகுதிகளில் இருந்து இந்த மலைப்பாம்பு லாரியில் வந்திருக்கலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.