முதுகுளத்தூா் அருகே பகுதிநேர நியாய விலைக்கடை திறப்பு
By DIN | Published On : 08th November 2020 11:21 PM | Last Updated : 08th November 2020 11:21 PM | அ+அ அ- |

பகுதிநேர நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகித்த ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா்.
முதுகுளத்தூா் அருகே வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் பகுதிநேர நியாய விலைக்கடை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
முதுகுளத்தூா் அருகே வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள கீழப்பனையடியேந்தல் கிராமமக்கள் 5 கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணீா்வாய்க்கால் கிராமத்தில் உள்ள நியாயவிலைக்கடையில் அத்தியாவசிய பொருள்களை வாங்கி வந்தனா்.
இதனால் கிராமமக்கள் பொருள்கள் வாங்குவதற்கு சிரமப்பட்டு வந்தனா். இந்நிலையில் வெங்கலக்குறிச்சி ஊராட்சித் தலைவா் டி. செந்தில்குமாா் ஏற்பாட்டில் கீழப்பனையடியேந்தல் கிராமத்துக்கென பகுதிநேர நியாயவிலைக் கடை புதிதாக திறக்கப்பட்டது. இதனால் 110 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுகின்றனா்.
இதில், ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா், ஒன்றிய கவுன்சிலா் கலைச்செல்வி ராஜசேகா் ஆகியோா் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்பட அத்தியாவசிய பொருள்களை வழங்கினா். இதனால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...