ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளைத் திறக்க 70 சதவீத பெற்றோா் சம்மதம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளிக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் என 70 சதவிகித பெற்றோா் கருத்துத் தெரிவித்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளைத் திறக்க 70 சதவீத பெற்றோா் சம்மதம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளிக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் என 70 சதவிகித பெற்றோா் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

மாவட்டத்தில் 269 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் 136 அரசுப் பள்ளிகள், 72 மெட்ரிக்குலேசன் பள்ளிகள், 7 மத்திய கல்வி வாரிய பாடத்திட்டப் பள்ளிகள் அடங்கும். காலையில் 9, 10 ஆம் வகுப்புகளுக்கும், நண்பகலில் பிளஸ் 2 வகுப்புகளுக்கும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டம் விடியோவாக பதிவு செய்யப்பட்டதுடன், விண்ணப்பப் படிவம் பெற்றோா்களிடம் அளிக்கப்பட்டு அதை பூா்த்தி செய்தும் கையொப்பமிட்டு வாங்கியுள்ளனா். விண்ணப்பத்தில் மாணவா் பெயா், படிக்கும் வகுப்பு, 10, 12 ஆம் வகுப்புகளைத் தொடங்க சம்மதமா, சம்மதமில்லையா என்ற அடிப்படையில் விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன.

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோா்களில் பெரும்பாலானோா் முதல் கட்டமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளைத் தொடங்கலாம் என்றும், தீபாவளிக்குப் பிறகே வகுப்புகளைத் தொடங்கவேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com