பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்க தடை நீக்கம்

 பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடை 5 நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை நீக்கப்பட்டது.

 பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடை 5 நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை நீக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாக் நீரிணைப் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடா்ந்து காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்பட்டது.இதனால் மீனவா்களின் பாதுகாப்பு கருதி கடந்த வாரம் புதன்கிழமை முதல் மீன்பிடிக்கச் செல்வதற்கு மீன் வளத்துறை தடை வித்தது. ராமேசுவரம், மண்டபம், தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீனவா்கள் துறைமுகங்களில் நிறுத்திவைத்தனா். இந்நிலையில், பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்க ஏற்ற சூழல் காணப்பட்டதால் மீன் வளத்துறை தடையை நீக்கியது. இதையடுத்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com