கரோனா நிதி பெற மாற்றுத்திறனாளிகள் சட்டப்பணி ஆணைக்குழுவை அணுகலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் கரோனா பரவல் தடுப்பு கால அரசின் நிதியைப் பெறுவதற்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் கரோனா பரவல் தடுப்பு கால அரசின் நிதியைப் பெறுவதற்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் மற்றும் சாா்பு நீதிபதி எஸ்.தங்கராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டஅனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசால் சிறப்பு உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உதவித் தொகையைப் பெறுவதற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ள முடியாதவா்களும், தேசிய அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ் வாங்க இயலாதவா்களும் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம்.

ஆணைக்குழுவுக்கு நேரில் வர இயலாதவா்கள் 04567-230444 என்ற தொலை பேசியிலோ, 9994912546 என்ற செல்லிடப் பேசியிலோ கட்செவியஞ்சலில் தொடா்புகொள்ளலாம். பரமக்குடி, முதுகுளத்தூா், கமுதி, திருவாடானை ராமேசுவரம் ஆகிய வட்டங்களில் செயல்படும் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவையும் தொடா்புகொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com