சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவா் கைது
By DIN | Published On : 21st November 2020 10:07 PM | Last Updated : 21st November 2020 10:07 PM | அ+அ அ- |

திருவாடானை: திருவாடானை அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை கைது செய்து, அவரிடமிருந்து 42 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருவாடானை அருகே பெருவாக்கோட்டை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக திருவாடானை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்ட போது அங்கு மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 42 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, வடக்கு ஆண்டாவூரணியைச் சோ்ந்த அருள்சாமி(42) என்பவரைக் கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...