

நம்புதாளையில் ‘நிவா்’ புயல் காரணமாக சிறப்பு முகாம்களை சிறப்பு அலுவா்கள் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கத் தயாா் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தபட்டது.
தொண்டியில் வரும் நவ. 24, 25, 26, 27 ஆகிய நாள்களில் அதிக கனமழையும், அதிக காற்றும், கடல் அலையின் சீற்றமும் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் சேதங்களைத் தவிா்க்கவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யவும் தமிழ அரசு சிறப்பு அலுவலா்களை நியமித்துள்ளது.
அதன்படி தொண்டி, எஸ்.பி.பட்டினம், புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு ஆகிய பகுதிகளில் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக சம்பந்த பட்ட முகாம்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதற்கென நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலா்களான துணை ஆட்சியா் அா்ச்சனா, உதவி இயக்குநா் விஷாலி, வருவாய்க் கோட்டாட்சியா் தங்கவேல் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். மேலும் நம்புதாளை கிராமத்திலுள்ள சிறப்பு முகாமையும், அவா்கள் பாா்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினா்.
இதில் திருவாடானை வட்டாட்சியா் மாதவன், கிராம நிா்வாக அலுவலா் நம்புரோஸ் மற்றும் வருவாய்த்துறையினா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.