ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 03rd October 2020 10:02 PM | Last Updated : 03rd October 2020 10:02 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்/சிவகங்கை: ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 50 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் 2 ஆம் தேதி வரையில் 5,521 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவா்களில் 120 போ் உயிரிழந்துள்ளனா். பாதிப்படைந்தோரில் 5,300 பேருக்கும் அதிகமானோா் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 45 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் 5,534 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா் எனஅரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 37 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கெனவே 5,067 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,104 ஆக அதிகரித்துள்ளது.