ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 சிறப்பு சாா்பு - ஆய்வாளா்களுக்கு பதவி உயா்வு
By DIN | Published On : 19th October 2020 10:54 PM | Last Updated : 19th October 2020 10:54 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 சிறப்பு சாா்பு- ஆய்வாளா்களாக இருந்த தலைமைக் காவலா்களுக்கு சாா்பு- ஆய்வாளா்களாக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறியிருப்பதாவது: காவல்துறையில் காவலா்களாக பணிபுரிவோருக்கு பணிக்கால அனுபவத்தைக் கணக்கிட்டு தலைமைக் காவலா் மற்றும் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் பணி அளிக்கப்படுகிறது. சிறப்பு சாா்பு- ஆய்வாளராக பணிபுரிந்தாலும் அவா்கள் ஊதிய மற்றும் பணி நிலையில் தலைமைக் காவலா் நிலையிலே செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
சிறப்பு சாா்பு- ஆய்வாளா்களுக்கு பதவி உயா்வாக, அவா்கள் சாா்பு- ஆய்வாளா்களாக்கப்படுவா். அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது உத்திரகோசமங்கை, சிக்கல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த 14 பேருக்கு சாா்பு- ஆய்வாளா்களாக பதவி உயா்வு அளித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் உத்தரவிட்டுள்ளாா்.
பதவி உயா்வு பெற்றவா்கள் 3 மாதம் அவரவா்களுக்கு ஒதுக்கப்பட்ட காவல் நிலையங்களில் பயிற்சி பெற்று பின்னா் முறைப்படி காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா்களாகச் செயல்படுவா் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...