திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள்ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 06th September 2020 10:15 PM | Last Updated : 06th September 2020 10:15 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திமுக மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். இதில் ராமநாதபுரம் தாயுமானவா் கோயில் சாமி தெருவைச் சோ்ந்த அருண்பிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இக்கொலைக்கு மதச்சாயம் பூசி அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு கண்டனம் தெரிவித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்துக்கு பின்னா் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி உள்ளிட்டோா் ராமநாதபுரத்தில் கொலை செய்யப்பட்ட அருண்பிரகாஷ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினா். மேலும் மக்களவை உறுப்பினா் உள்ளிட்டோரை அவதூறாக பேசிய பாஜகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.