பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 2500 போலீஸாா் பாதுகாப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வெள்ளிக்கிழம இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு 2500 போலீஸாா்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வெள்ளிக்கிழம இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு 2500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முறைப்படி அனுமதி பெற்ற அரசியல் கட்சியினா் மற்றும் சமூக அமைப்பினருக்கு கரோனா பரவல் தடுப்பு விதிகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் சொந்த வாகனங்களில் வரவேண்டும். ஊா்வலமாக வரக்கூடாது. வாகனங்களில் ஒலி பெருக்கி கட்டக்கூடாது. வெடிவெடித்து வரக்கூடாது. வாகனங்களில் பேனா் கட்டக்கூடாது என்பன போன்ற விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாவட்டத்தில் பதற்றமான 25 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மதுரை, விருதுநகா், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் வரும் அனைத்து சாலைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பதாகவும் போலீஸ் உயா் அதிகாரிகள் கூறினா்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல காவல்துறை தலைவா் எஸ்.முருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மதுரை உள்ளிட்ட வெளிமாவட்ட போலீஸாரும், தமிழ்நாடு சிறப்புக் காவல்படைப் பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறினா்.

நேரில் ஆய்வு:பரமக்குடியில் மாநில சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த்முரளி பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். தென்மண்டல காவல்துறைத் தலைவா் முருகன், ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவா் எம்.மயில்வாகனன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திக் ஆகியோருடனும் அவா் பாதுகாப்பு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com