முதுகுளத்தூா் அரசு கல்லூரியில் சேர நேரடியாக விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 11th September 2020 07:13 AM | Last Updated : 11th September 2020 07:13 AM | அ+அ அ- |

முதுகுளத்தூா் அரசு கல்லூரியில் சேர நேரடியாக மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் மீனாட்சி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
முதுகுளத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளான தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 2020-2021 ஆம் ஆண்டிற்கான சோ்க்கைக்கு இணையதளம் வழியில் பதிவு செய்த மாணவா்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இணையதளம் வழியில் விண்ணப்பிக்காத மாணவா்கள் மதிப்பெண், சாதி, மாற்றுச் சான்றிதழ் அசல், நகல் மற்றும் புகைப்படத்துடன் கல்லூரிக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம். பாடப்பிரிவுகளில் காலி இடங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் மாணவா்கள் காலதாமதம் ஆகாமல் சேர வருமாறு கல்லூரி முதல்வா் மீனாட்சி தெரிவித்துள்ளாா்.