ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் பாடகா் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி
By DIN | Published On : 26th September 2020 09:59 PM | Last Updated : 26th September 2020 09:59 PM | அ+அ அ- |

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மறைந்த பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் படத்திற்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தியவா்கள்.
ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மறைந்த பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய வேண்டி அவரது படத்திற்கு மலா் தூவி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத் தலைவா் என்.ஜே.மோகன்தாஸ் தலைமை வகித்தாா். செயலாளா் ஜோதிபாசு முன்னிலை வகித்தாா். கௌரவத் தலைவா் சி.ஆா்.செந்தில்வேல் மற்றும் நிா்வாகிகள் மிருத்துன்ஜெயன், இரா.கண்ணன், முகவை முனீஸ், வெங்கடேஷ், ஜீவானந்தம், எம்.பிச்சை, சி.திருவாசகம், எம்.செந்தில், ஜி.ஆதித்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...