மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரையும் தனிமைப்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரையும் வரும் 25 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்க இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:15 am

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரையும் வரும் 25 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்க இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினா் 9 மீனவா்கள் மற்றும் ஒரு விசைப்படகை சிறைபிடித்துச் சென்றனா்.

இந்த மீனவா்களின் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினா் 9 மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்தனா். அனைவருக்கும் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக உடை, உணவு மற்றும் பொருள்கள் தனித்தனியாக வழங்கப்பட்டது. திங்கள்கிழமை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட மீனவா்கள் 9 பேரையும் வரும் 25 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டா்.

இதையடுத்து மீனவா்கள் 9 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.