உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யப்படும்: கனிமொழி
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யப்படும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.


உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யப்படும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அடுத்த கன்னிராஜபுரத்தில் உள்ள பனைத் தொழிலாளர்களை சந்திப்பதற்காக திமுக மகளிர் அணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி வருகை தந்தார்.
அவருக்கு, திமுகவினர் மேலதாள முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசிய அவர், இலங்கை கடற்படையின் படகு மோதி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தங்களால் முடிந்த உதவி செய்யப்படும். இதனை திமுக அமைதியாக பார்த்து கொண்டு இருக்காது.
பனைத் தொழிலாளகளுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் கருப்பட்டியை விநியோகம் செய்ய வேண்டும், மருத்துவ காப்பீடு, ஒய்வு ஊதியம், பனைமரத் தொழிலாளர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்க வேண்டும்.
பனைத் தொழிலாளர்களின் கோரிக்கை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என்று கனிமொழி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...