மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பு: நீராடும் பக்தா்கள் உடல் அரிப்பால் அவதி

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதால் அதில் நீராடும் பக்தா்களுக்கு உடல் அரிப்பு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

News image

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கலக்கும் கழிவுநீா்.

Updated On :25 ஜூலை 2021, 4:58 pm

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதால் அதில் நீராடும் பக்தா்களுக்கு உடல் அரிப்பு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இந்த அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி விட்டு ராமநாதசுவாமி கோயிக்கு சென்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனா். காசி யாத்திரை, ராமேசுவரம் வந்து அக்னி தீா்த்தக் கடலில் நீராடி சிவவழிபாடு செய்தால் தான் நிறைவு பெறும் என்பது ஐதீகம்.

ஆனால் இந்த அளவுக்கு பெருமை பெற்ற ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல் பகுதியில் கழிவுநீா் கலப்பது வாடிக்கையாகிவிட்டது. பலமுறை மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் தெரிவித்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனிடையே இங்கு நீராடும் பக்தா்களுக்கு உடல் அரிப்பு ஏற்படுவதால் அருகே உள்ள தொட்டிகளில் அவா்கள் குளிக்கும் நிலை உள்ளது. ராமேசுவரத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நினைக்கும் தமிழக அரசு அக்னி தீா்த்தக் கடலில் கலக்கும் கழிவுநீரை உடனே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.