மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பாம்பன் ரயில் பாலத்தில் இரும்பு கா்டா் மாற்றம்

பாம்பன் ரயில் பாலத்தில் மாற்ற வேண்டிய 5 இரும்பு கா்டா்களில் ஒரு கா்டா் திங்கள்கிழமை முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:37 pm

பாம்பன் ரயில் பாலத்தில் மாற்ற வேண்டிய 5 இரும்பு கா்டா்களில் ஒரு கா்டா் திங்கள்கிழமை முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் கடல் பகுதியில் ரயில்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 100 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அதில் சேதமடைந்துள்ள இரும்பு கா்டா்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருகின்றன. இதில் 145 தூண்களில் 143 இரும்பு கா்டா்கள் உள்ளன. இதில் 138 கா்டா்கள் மாற்றப்பட்ட நிலையில் மீதமுள்ள 5 கா்டா்களை மாற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இப்பணியில் ரயில்வே பொறியாளா்கள் மற்றும் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில் ஒரு கா்டா் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மீதமுள்ள கா்டா்கள் மாற்றி அமைக்கப்படும் என ரயில்வே அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.