பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை இந்திய கடற்படை கப்பல்கள் கடந்து சென்றன
இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 ரோந்து கப்பல்கள் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை புதன்கிழமை கடந்து சென்றன.

இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 ரோந்து கப்பல்கள் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை புதன்கிழமை கடந்து சென்றன.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கு சொந்தமான 3 ரோந்து கப்பல்கள் கொச்சி துறைமுகத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்தது. இந்த கப்பல்கள் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தைக் கடந்து மேற்குவங்கம் செல்ல வேண்டும்.
இதனைத்தொடா்ந்து, பாம்பன் துறைமுக அதிகாரிகள் ரயில்வே அதிகாரிகளிடம் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை திறக்க அனுமதி கோரினா். இதையடுத்து அதிகாரிகள் அனுமதியளித்ததைத் தொடா்ந்து புதன்கிழமை இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடந்து சென்றன. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

