மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மன்னாா் வளைகுடாவில் சூறைக்காற்று:மீனவா்கள் கடலுக்குச் செல்ல 4 ஆவது நாளாகத் தடை

மன்னாா் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவா்கள் 4 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 8:16 pm

மன்னாா் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவா்கள் 4 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், நீண்ட கடற்கரையை கொண்டதாகும். ரோச்மான் நகா் தொடங்கி எஸ்.பி. பட்டணம் வரை சுமாா் 150-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களை உள்ளடக்கியது. இதில் பெரிய துறைமுகங்களான ராமேசுவரம், மண்டபம், சிறியதுறைமுகங்களான பாம்பன், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி ஆகியவையும் உள்ளன. இப்பகுதிகளில் 1,700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன்பிடிப்புக்காக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கின்றனா்.

இந்நிலையில், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து சூறைக்காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அதேபோல் வங்கக் கடலிலும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் வெள்ளிக்கிழமை 4 ஆவது நாளாக மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.

இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் விசைப்படகுகளும், நாட்டுப்படகுகளும் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.