பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமக்குடி வட்டக்கிளை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் தமீம்ராஜா தலைமை வகித்தாா். மாவட்ட இணைச்செயலாளா் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தாா். வருவாய் ஆய்வாளா் குமரன் வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்ட காலத்தை ஒழுங்குபடுத்த வேண்டும், கரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா். இதில் துணை வட்டாட்சியா் ரங்கராஜன் உள்பட வருவாய்த் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.