மின்னல் தாக்கி விவசாயி பலி
By DIN | Published On : 17th August 2021 11:36 PM | Last Updated : 17th August 2021 11:36 PM | அ+அ அ- |

திருவாடானை அருகே செவ்வாய்க்கிழமை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி மீது மின்னல் தாக்கியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திணைகாத்தான்வயல் அருகே வலிமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (49). விவசாயியான இவருக்கு, ஜெயா என்ற மனைவியும், சஞ்சய்காந்தி (13), லிங்கம் (11) ஆகிய 2 மகன்களும் உள்ளனா். இந்நிலையில், மகாலிங்கம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வலிமாத்தூா் பகுதியில் தனது ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த போது, இடியுடன் கூடிய சாரல் மழை பெய்துள்ளது. இதில், மின்னல் தாக்கியதில் மகாலிங்கம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானாா்.
தகவலறிந்த திருவாடானை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.