கரோனா பரவல் காரணமாக தியாகி ஒண்டி வீரன் நினைவிடத்துக்குச் செல்ல வேண்டாம் என ராமநாதபுரம் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம், நெல்கட்டும் செவல் பகுதியில் உள்ள ராஜபச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஆக. 20) தியாகி ஒண்டிவீரனின் 250 ஆவது நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது கரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் கூட்டமாகக் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தென்காசி மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா். எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்பினா் ஒத்துழைப்பு தந்து மேற்படி நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.