மா்மப் படகு வழக்கு: உச்சிப்புளி காவல் நிலையத்துக்கு மாற்றம்
By DIN | Published On : 20th August 2021 08:58 AM | Last Updated : 20th August 2021 08:58 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய படகு கைப்பற்றப்பட்ட வழக்கானது கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சிப்புளி காவல் நிலையத்துக்கு தற்போது மாற்றப்படுள்ளது.
ராமநாதபுரம் உச்சிப்புளி அருகேயுள்ளது அழகாத்தவலசை. இங்குள்ள கடற்கரையில் கடந்த 2015 ஆம் ஆண்டு படகு ஒன்று கரை ஒதுங்கியது. அந்த படகை மீட்ட கடலோரக் காவல்படையினா் அதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா். இந்நிலையில், அந்த வழக்கானது கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உச்சிப்புளி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படகு குறித்து உச்சிப்புளி போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.