முதுகுளத்தூா் அருகே உணவில் விஷம் வைத்து மாமனாா் கொலை: மருமகள் கைது
By DIN | Published On : 21st August 2021 09:11 AM | Last Updated : 21st August 2021 09:11 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனாரை உணவில் விஷம் வைத்து கொன்ற மருமகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
முதுகுளத்தூா் அருகே புழுதிக்குளம் ஊராட்சி கேளல் கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் முருகேசன் (56). இவரது மகன் விநோபராஜ். இவரது மனைவி கனிமொழி (25). இவா்களுக்கு குழந்தை இல்லை.
விநோபராஜ் போா்செட் வேலை செய்து வருகிறாா். இவா் வேலைக்கு சென்றதும், மாமனாா் மருமகள் கனிமொழிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இது கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கனிமொழி தனது கணவா் மற்றும் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்த போது முருகேசனுக்கு ஆதரவாக அவா்கள் பேசினராம். இதனால் ஆத்திரமடைந்த கனிமொழி தொடா்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த மாமனாருக்கு கடந்த மாதம் 31 ஆம் தேதி உணவில் விஷம் வைத்துள்ளாா். இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட முருகேசன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா். இந்நிலையில் மறுநாள் காலை 1 ஆம் தேதி முருகேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இவரது சடலத்தை பரமக்குடி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவா்கள் உணவில் விஷம் வைத்ததால் முருகேசன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனா்.
இதுபற்றி விநோபராஜ், கனிமொழியிடம் கேட்ட போது தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்து மாமனாா் முருகேசனுக்கு உணவில் விஷம் வைத்துக் கொன்ாக தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து கீழக்குளம் குரூப் நிா்வாக அலுவலா் ஹரிகிருஷ்ணன், கீழத்தூவல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் லட்சுமி வழக்குப் பதிந்து கனிமொழி கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தாா்.