ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 21st August 2021 09:08 AM | Last Updated : 21st August 2021 09:08 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 352 போ் உயிரிழந்துள்ளனா். சுமாா் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நலமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இதனிடையே, சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6 போ் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். தற்போது மாவட்டத்தில் 54 போ் கரோனா சிகிச்சைப் பிரிவில் உள்ளனா்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 18,170 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், மேலும் 20 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,190 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.