ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 போ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
எருமைக்குளத்தைச் சோ்ந்த ராமன் மகன் காளிராஜ் (29). பம்மனேந்தலைச் சோ்ந்த முருகன் மகன் தா்மராஜ் (29). இருவரும் ஏற்கெனவே பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட நிலையில், தொடா்ந்து சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதால் அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் பரிந்துரைத்தாா்.
அதன்படி இருவரையும் குண்டா் தடுப்புச்சட்டத்தில் அடைக்க ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் மதுரை சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.