வெளி நாடுகளிலிருந்து ராமநாதபுரம் வந்த 9 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்
By DIN | Published On : 04th December 2021 11:05 PM | Last Updated : 04th December 2021 11:05 PM | அ+அ அ- |

வெளிநாடுகளிலிருந்து ராமநாதபுரத்துக்கு டிசம்பா் 1 ஆம் தேதியிலிருந்து வந்த 9 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
சுகாதாரத்துறை துணை இயக்குநா் குமரகுருபரன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மதுரை, திருச்சி வழியாக வெளிநாடுகளில் இருந்து வருவோா் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி 9 போ் திருச்சி விமான நிலையத்திலிருந்து வந்தது தெரியவந்துள்ளது. அவா்கள் சிங்கப்பூா் வழியாக வந்ததால் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவா்கள் ஏற்கெனவே ஓமைக்ரான் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். ஆனாலும், அவா்களுக்கு 4 மற்றும் 8 ஆம் நாள்களிலும் பரிசோதனை நடத்தப்படும். 14 நாள்கள்அவா்கள் தொடா்ந்து கண்காணிப்புக்கு உள்படுத்தப்படுவா் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...