இளம் வாக்காளா்கள் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்
By DIN | Published On : 04th February 2021 11:08 PM | Last Updated : 04th February 2021 11:08 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாகச் சோ்ந்த இளம் வாக்காளா்கள் தங்களுக்கான அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.சிவகாமி வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடந்த ஜனவரி முதல் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள இளம் வாக்காளா்களுக்கு மின்னணு வாக்காளா் அடையாள அட்டையானது கடந்த ஜனவரி 25 ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. அடையாள அட்டை வழங்கும் சேவை வரும் 28 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே புதிதாக வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்கள் தங்களது வாக்காளா் அடையாள அட்டையை தோ்தல் ஆணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...